தமிழ் கட்டுரை எழுதுவது எப்படி
சிறப்பான
தமிழ் கட்டுரை எழுதுவது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம். இந்தப் பதிவானது தொடக்கநிலை 3,4 மாணவர்களுக்கு ஏற்ற ஒரு வழிகாட்டியாக
இருக்கும்.
- எழுதப்போகும் கதையானது கண்டிப்பாக இறந்தகாலத்தில் மட்டுமே எழுதவேண்டும்.
- கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு படங்களுக்கும் நான்கு பத்திகள் எழுத வேண்டும்.
- ஒரு படத்திற்கு நான்கு முதல் ஆறு வரை வாக்கியங்கள் இருக்க வேண்டும்.
- இனிய சொற்றொடர் பயன்படுத்துவது கட்டுரைக்கு அழகு சேர்க்கும்.
- செய்யுள் அல்லது பழமொழிகள் பயன்படுத்தலாம்.
ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன் கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு படங்களையும் நன்கு உற்றுநோக்கி, நாம் எழுதப்போகும் கட்டுரையின் முக்கிய கதாப்பாத்திரம் எது என்பதையும், கதையின் முடிவில் ஏதேனும் நீதி இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
முக்கிய
கதாப்பாத்திரம் எது என்பதை தெரிந்து
கொண்டபின், அந்தக் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு கட்டுரையை ஆரம்பிக்க வேண்டும்.
கட்டுரையை முதல்படத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். கட்டுரையை ஆரம்பிக்க பலவிதமான வழிகள் உள்ளன.
- உரையாடல் மூலம் ஆரம்பிக்கலாம். முக்கிய கதாப்பாத்திரம் மற்றொருவருடன் பேசிக்கொண்டிருப்பது போன்ற படம் இருந்தால் உரையாடல் மூலம் ஆரம்பிக்கலாம்.
- முக்கிய கதாப்பாத்திரம் தனியாக இருந்தாலோ அல்லது பிறருடன் வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலோ, கதை(கட்டுரை) நிகழும் நாள் அல்லது நேரத்தைச் சொல்லி ஆரம்பிக்கலாம்.
முதல்
படத்தின் நிகழ்ச்சி, நிகழும் நாள்,காலம்(காலை,மாலை), நிகழ்ச்சியில் பங்குபெறும் கதாப்பாத்திரங்கள்(யார் யார் இருக்கிறார்கள்),
நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஆகியவற்றைப் பற்றிக்
கூற வேண்டும். பின்பு கதாப்பாத்திரத்தின் உணர்வு,மனநிலை(கவலை,மகிழ்ச்சி,அதிர்ச்சி,கோபம்) பற்றிக் கூற வேண்டும்.நிகழ்வு
நடைபெறும் இடத்தில் கேட்கக்கூடிய ஓசைகளைப்(ஒலிகள்) பற்றியும் கூறலாம்.இவற்றைக் கூறினாலே ஒரு படத்திற்கு ஆறு
வாக்கியங்கள் தாராளமாக வந்துவிடும்.
இரண்டாவது படத்தைப் பற்றி எழுதும் போது, இரண்டாவது பத்தி ஆரம்பித்து எழுதவேண்டும். இரண்டாம் படத்தின் கதையானது, முதல் படத்தின் தொடர்ச்சியாக இருக்கவேண்டும். இரண்டாம் படத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடம், முதல் படத்திலிருந்து மாறியிருந்தால் அந்த இடத்தைப்பற்றியும், அங்கு யார் யார் இருக்கிறார்கள் என்பது பற்றியும், அங்கு நடைபெறும் நிகழ்ச்சி பற்றியும் எழுத வேண்டும். முதல் படத்தைப் போலவே, கதாப்பாத்திரங்களின் உணர்வுகள் மற்றும் அங்கே கேட்கும் ஓசைகள்,ஒலிகள் பற்றி எழுதலாம்.
மூன்றாவது
படத்பைப்பற்றி எழுதும் போது, மூன்றாவது பத்தி ஆரம்பித்து எழுதவேண்டும்.
மூன்றாவது படத்தின் கதையானது,
இரண்டாம் படத்தின் தொடர்ச்சியாக இருக்கவேண்டும். மூன்றாவது படத்தில் நிகழ்ச்சி நடைபெறும்
இடம், இரண்டாம் படத்திலிருந்து மாறியிருந்தால் அந்த இடத்தைப்பற்றியும், அங்கு யார்
யார் இருக்கிறார்கள் என்பது பற்றியும், அங்கு நடைபெறும் நிகழ்ச்சி பற்றியும் எழுத வேண்டும்.
கதாப்பாத்திரங்களின் உணர்வுகள் மற்றும் அங்கே கேட்கும் ஓசைகள்,ஒலிகள் பற்றி எழுதலாம்.
நான்காம் பத்தி
மிக முக்கியமான பத்தி. கதைக்கு கட்டுரைக்கு முடிவுரை இந்தப் பத்தியில் எழுத வேண்டும்.
அதாவது கட்டுரையை முடிக்கும்படியாக எழுதவேண்டும். நான்காவது படத்பைப்பற்றி எழுதும் போது, நான்காவது பத்தி ஆரம்பித்து எழுதவேண்டும்.
நான்காவது படத்தின் கதையானது,
மூன்றாவது படத்தின் தொடர்ச்சியாக இருக்கவேண்டும். கட்டுரையில் ஏதாவது நீதி இருந்தால்,
அதை வைத்து கட்டுரையின் முடிவுரை எழுதவேண்டும். நீதி எழுதுவதற்கு, செய்யுள் அல்லது
பழமொழிகள் மேற்கோள் காட்டி எழுதலாம். முக்கிய
கதாப்பாத்திரம் ஏதாவது படிப்பினையைக் கற்றுக் கொண்டால், அதை வைத்து கதையை முடிக்கலாம்.
அந்த படிப்பினைக்குத் தகுந்தாற்போல் செய்யுள் அல்லது பழமொழிகள் மேற்கோள் காட்டி எழுதலாம்.
படிப்பினை அல்லது நீதி இல்லாத கட்டுரைகளுக்கு, முதல் மூன்று படங்களிலும் நடைபெற்ற நிகழ்வுகள்
நான்காம் படத்தில் முடிவுக்கு வரும்படியாக எழுதி கட்டுரையை முடிக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக